விமானப்படையின் உலக சிறுவர் தின கொண்டாட்ட நிகழ்வுகள்

"எல்லாவற்றையும் விட சிறுவர்கள் முக்கியமானவர்கள் " எனும்  தொனிப்பொருளில் இலங்கை விமானப்படையின்  சேவா வனிதா பிரிவின் ஏற்பாட்டில் 2023 ம் ஆண்டுக்கான  உலக சிறுவர் தினம் விமானப்படை தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ அவர்களின்  பங்கேற்பில்  பண்டாரகம " பேர்ல் பே " (Pearl Bay Water Park) ல்  இடம்பெற்றது.

சேவா வனிதா பிரிவின் தலைவி  திருமதி இனோகா ராஜபக்ஷ அவர்களின்  வழிகாட்டலின்கீழ் 1000 சிறார்கள் பங்கேற்றதுடன் சிறுவர்களுக்கான பல வேடிக்கை விளையாட்டுக்களும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

இலங்கை விமானப்படையின் சேவா வனிதா பிரிவினால் நடாத்தப்பட்ட" குவன் ரந்தரு சித்தம்  2023  " சித்திர போட்டியில்  வெற்றி பெற்றவர்களுக்கு பரிசில்களும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டதுடன், இந்நிகழ்வில் பங்குபற்றிய ஒவ்வொரு சிறார்களுக்கு  பெறுமதியான பரிசுப் பொதியும் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்வில் விமானப்படையின் தலைமை தளபதி  மற்றும் பணிப்பாளர் சபை அதிகாரிகள் மற்றும் விமானப்படை சேவை வனிதா பிரிவின் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.