இலங்கை விமானப்படை ஸ்ரீலங்கன் விமான சேவையுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளது

இலங்கை விமானப்படைக்கும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் 2023 ஆம் ஆண்டு ஒக்டோபர் 04 ஆம் திகதி விமானப்படை தலைமையகத்தில் கைச்சாத்திடப்பட்டது. எயார்  மார்ஷல் உதேனி ராஜபக்ஷ மற்றும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் தலைவர் அசோக் பத்திரகே ஆகியோரின் தலைமையில் இந்த வைபவம் இடம்பெற்றது.

இந்த உடன்படிக்கையின் நோக்கமானது, குறிப்பாக விமானப் பயிற்சி, கல்வி மற்றும் பரஸ்பர ஆர்வமுள்ள ஏனைய துறைகளில் இலங்கை விமானப்படை மற்றும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் ஆகியவற்றுக்கு இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்துவதாகும்.

விமானப்படையின் பிரதிப்தலைமை  தளபதி எயார் வைஸ் மார்ஷல் ரஞ்சித் சேனாநாயக்க, ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் பிரதம நிறைவேற்று அதிகாரி திரு. ரிச்சர்ட் நட்டல், ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் ஏவியேஷன் கல்லூரியின் பொது முகாமையாளர் திரு.பிரிமல் டி சில்வா, விமானப்படை முகாமைத்துவ சபை உறுப்பினர்கள் மற்றும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அதிதிகள் ஆகியோர் கலந்துகொண்டனர். இந்நிகழ்வில் பிரமுகர்கள் பலர் கலந்துகொண்டனர்.

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.