விமானப்படை தளபதியின் தலைமையில் "டெக்னோ 2023 " தேசிய பொறியியல் தொழில்நுட்ப கண்காட்சி இரண்டாம் நாள் ஆரம்பம்.

"டெக்னோ 2023" தேசிய பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கண்காட்சி  பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில்  (BMICH)  கடந்த 2023 அக்டோபர் 20ம் திகதி ஆரம்பித்து வைக்கப்பட்டது  அதன் மற்றும் இரண்டாம் நாள் தொடக்க விழாவில் விமானப்படை தளபதி  எயார்  மார்ஷல் உதேனி ராஜபக்ஷ அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

விமானியும்  மற்றும் தொழில்முறை பொறியியளாளருமான  விமானப்படை தளபதி தனது ஆரம்ப உரையில், இலங்கையின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப பாதுகாப்பு படையின் தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் எந்த அளவிற்கு உதவுகின்றன என்பதை இதன்போது விளக்கினார்.

இலங்கை பொறியியல் நிறுவகத்தினால் (IESL) வருடாந்தம் ஏற்பாடு செய்யப்பட்ட  இந்த கண்காட்சியின்  மூலம் எதிர்கால கண்டுபிடிப்பாளர்களை  உருவாக்க வழிவகுப்பதோடு  இந்த ஆண்டு  "டெக்னோ 2023" கண்காட்சியின் கருப்பொருள்     ''பொறியியல் தொழில்நுட்பத்தின் மூலம் பொருளாதாரத்தை கட்டியெழுப்புதல்'' என்பதாகும். "டெக்னோ 2023" ஒரு கண்காட்சி மட்டுமல்லாது , இதன்மூலம்  உரையாடல், அறிவு பரிமாற்றம் மற்றும் பொறியியல் ஒத்துழைப்பு போன்றவற்றுக்காக  ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

 


 

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.