கண்டி ஸ்ரீ தலதா மாளிகையில் விமானப்படை போர்வீரர்களுக்கான நினைவேந்தல் மாதவழிபாடுகள்.

தாய்நாட்டிற்காக தன்னுயிர் நீத்த விமானப்படை போர்வீரர்கள் மற்றும் தற்போது சேவையில் உள்ள விமானப்படை அங்கத்தவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்காக பௌத்த மத வழிபாடுகள் கண்டி ஸ்ரீ தலதா மாளிகையில் கடந்த 2023 அக்டோபர் 22 மற்றும் 23ம் திகதிகளில் விமானப்படை தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ அவர்களின் பங்கேற்பில் இடம்பெற்றது.

யுத்தத்தின் போது தாய்நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த அனைத்து போர்வீரர்களையும் நினைவுகூரும் வகையில் வருடாந்தம் இந்த பௌத்த சமய நிகழ்வை விமானப்படை நலன்புரி பணிப்பகம்  ஏற்பாடு செய்து வருகின்றது.  இந்த பௌத்த மத விழாவின் முதல் நாளான 22 அக்டோபர் 2023 அன்று மாலை கிளன்பச பூஜையும் 02ம்  நாள்  ஏனைய  வழிபாடுகளும்  இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் விமானப்படை சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி. இனோகா ராஜபக்ஷ மற்றும் விமானப்படை தலைமை தளபதி மற்றும் விமானப்படை பணிப்பாளர்கள் அதிகாரிகள் படைவீரர்கள்  கலந்துகொண்டனர்.

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.