2023 ம் ஆண்டுக்கான விமானப்படை சேவை வனிதா பிரிவின் பொதுக்கூட்டம்.

விமானப்படை  சேவா வனிதா பிரிவின் வருடாந்த பொதுக்கூட்டம் கடந்த 2023 டிசம்பர் 08ம் திகதி விமானப்படை தலைமயக்கத்தில்  இடம்பெற்றது.

இலங்கை விமானப்படை சேவை வனிதா பிரிவின் தலைவி திருமதி இனோகா ராஜபக்ஷ தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், விமானப்படை இயக்குநரகத்தின் உறுப்பினர்கள், தலைவர்கள் மற்றும் சீனக்குடா விமானப்படை  கல்விப்பீடம் உட்பட ஏனைய , தளங்கள் மற்றும் நிலையங்களின்   விமானப்படை சேவா வனிதா பிரிவிற்கு பொறுப்பான  ஒருங்கிணைப்பாளர்கள். கலந்துகொண்டனர்.

விமானப்படை சேவா வனிதா பிரிவு கீதம் பாடலுடன் நிகழ்வு ஆரம்பமானது, அதனைத் தொடர்ந்து சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி இனோகா ராஜபக்ஷவின் வரவேற்பு உரை இடம்பெற்றது. அதன்பின், சேவா வனிதா அலகின் செயலாளர், அணித்தலைவர் திருமதி.விலுதானி யடவர , முன்னைய பொதுக்குழு கூட்டத்தின் அறிக்கையை வாசித்தார்.அதன்பின், சேவா வனிதா பிரிவு பொருளாளர் ஸ்குவாட்ரன் லீடர் மனுஜ் அதிகாரி 2023ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை சமர்ப்பித்தார்.மேலும், 2023 ஆம் ஆண்டு இலங்கை விமானப்படை சேவா வனிதா பிரிவினால் மேற்கொள்ளப்பட்ட சமூக சேவைப் பொறுப்புக்களை தொகுத்து வழங்குகின்ற காணொளி ஒன்று பார்வையாளர்களை அறிவூட்டுவதற்காக திரையிடப்பட்டது.

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.