2023ம் ஆண்டுக்கான விமானப்படை தளங்களுக்குஇடையிலான வருடாந்த இடைநிலை வுஷு போட்டிகள்

2023ம் ஆண்டுக்கான விமானப்படை தளங்களுக்குஇடையிலான  வருடாந்த இடைநிலை வுஷு போட்டிகள் கடந்த 2023 டிசம்பர் 06ம் திகதி தொடக்கம் டிசம்பர் 08ம் திகதி வரை  கட்டுநாயக்க விமானப்படை தளத்தில் அமைந்துள்ள உள்ளகரங்கில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வின் இறுதிப்போட்டிகள்  விமானப்படை வளங்கள் பிரிவின் பணிப்பாளர்  நாயகம் எயார்   வைஸ் மார்ஷல்  கொஸ்வத்த அவர்களின் பங்கேற்பில் இடம்பெற்றது.

சர்வதேச வுஷூ சம்மேளனத்தின் (IWUF) புதிய விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளின் கீழ் ஆண்களுக்கான 08 எடைப் பிரிவுகளிலும், பெண்களுக்கான 06 எடைப் பிரிவுகளிலும் இந்த நிகழ்வு நடத்தப்பட்டது ஆடவர் சம்பியன்ஷிப் ரத்மலானை விமானப்படை தளம் கைப்பற்றியது, பெண்களுக்கான சாம்பியன்ஷிப்பை கொழும்பு விமானப்படை நிலையம் கைப்பற்றியது இரண்டாமிடத்தை முறையே  கொழும்பு மற்றும் ரத்மலான விமானப்படை தளங்கள் ஆடவர் ம்,ஆற்றும் மகளிர் பிரிவில் பெற்றுக்கொண்டனர்.


இந்த நிகழ்வில் விமானப்படையின் வுஷூ பிரிவின்  தலைவர், குரூப் கேப்டன் கே.ஏ.பி.எஸ்.குருவிட்ட, மற்றும் விமானப்படை விளையாட்டு இயக்குனரகத்தின் அதிகாரிகள், மூத்த அதிகாரிகள் மற்றும் படைவீரர்கள்  இறுதிப் போட்டிகள் மற்றும் பரிசளிப்பு விழாவைக் காண பங்கேற்றனர்.

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.