பாதுகாப்பு சேவைகள் கராத்தே போட்டித்தொடரை வென்ற விமானப்படை மகளிர் அணியினர்.

பாதுகாப்பு சேவைகள் விளையாட்டு கவுன்சிலால் 13 வது முறையாக ஏற்பாடு செய்யப்பட்ட பாதுகாப்பு சேவைகள் கராத்தே சாம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டிகள் சமீபத்தில் பனாகொடையில் உள்ள இலங்கை இராணுவ உள்ளக அரங்கில் வெற்றிகரமாக நிறைவடைந்தன.

இந்தப் போட்டியில் இலங்கை விமானப்படை பெண்கள் கராத்தே அணி தங்களது திறமைகளை வெளிப்படுத்தி  மகளிர் பிரிவில் சாம்பியன் பட்டத்தை பெற்றுக்கொண்டனர்.  இது முப்படைகளுக்குள் வளர்ந்து வரும் போட்டித்தன்மையையும் கராத்தேவின் உயர் தரத்தையும் எடுத்துக்காட்டுகிறது.
அதேபோல் ஆண்கள் பிரிவில் விமானப்படை ஆண்கள் அணி இரண்டாம் இடத்தைப் பிடித்ததுடன் ஆண்களுக்கான சாம்பியன் பட்டத்தை இலங்கை இராணுவ அணியினர் பெற்றுக்கொண்டனர்.

இந்தப் போட்டியின் விருது  மற்றும் சான்றிதழ்கள் வழங்கும் விழாவில் மேஜர் ஜெனரல் ஆர்.டி. சலே அவர்கள் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டார், மேலும் விமானப்படை கராத்தே பிரிவின் தலைவர் எயார் வைஸ் மார்ஷல் வஜிர சேனாதீர, விமானப்படை கராத்தேவின் செயலாளர் குரூப் கேப்டன் அமரசிங்க மற்றும் பல முப்படை மூத்த அதிகாரிகள் மற்றும் முப்படை வீர வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.