பாகிஸ்தானின் தேசிய வானொலி மற்றும் தொலைத்தொடர்புக் கூட்டுத்தாபனத்தின் பிரதிநிதிகள் குழு விமானப்படை தலைமையகத்தை பார்வையிட்டது.

பாகிஸ்தானின் தேசிய வானொலி மற்றும் தொலைத்தொடர்புக் கூட்டுத்தாபனத்தின் (NRTC) பிரதிநிதிகள் குழு  2025  அக்டோபர் 09,  விமானப்படை தலைமையகத்திற்கு வருகை தந்தது.

பாகிஸ்தானின் தேசிய வானொலி மற்றும் தொலைத்தொடர்புக் கூட்டுத்தாபனத்தின் நிர்வாக இயக்குநர் பிரிகேடியர் ஜெனரல் அஸ்மத் ஷபீர் தலைமையில் குழு  உறுப்பினர்களுடன் சேர்ந்து, விமானப்படைத் தளபதி எயார்  மார்ஷல் பந்து எதிரிசிங்கவை சந்தித்தனர். இந்த நிகழ்வைக் குறிக்கும் வகையில், கலந்துரையாடலின் பின்பு    நினைவுப் சின்னம்கள்  பரிமாறப்பட்டன.

மின்னணு மற்றும் கணினி பொறியியல் இயக்குநர் ஜெனரல் எயார்  வைஸ் மார்ஷல் அசிதா ஹெட்டியாராச்சி மற்றும் மின்னணு மற்றும் தொலைத்தொடர்பு பொறியியல் இயக்குநர் எயார்  கொமடோர் கபில ஏகநாயக்க ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.