விமானப்படை அதிகாரிகளுக்கான விரைவான மற்றும் வசதியான சமையல் கலை கருத்தரங்கு

விமானப்படை அதிகாரிகளுக்கான விரைவான மற்றும் வசதியான சமையல் கலை கருத்தரங்கு நவம்பர் 6ஆம் திகதி முதல் 7ஆம் திகதி வரை அனுராதபுரம் விமானப்படை முகாமில் நடைபெற்றது. மேலும் இக்கருத்தரங்கானது 'யூனிலீவர் உணவு தீர்வுகளின்' நிர்வாக செஃப் சமன் விஜேரத்ன அவர்களினால் நிகழ்த்தப்பட்டமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

இக்கருத்தரங்கானது சீன, இத்தாலிய, தாய் மற்றும் இந்திய உணவுகளை தயாரிப்பதற்கு புதிய விரைவான மற்றும் வசதியான சமையல் முறைகள் அடிப்படையாக கொண்டது.

'ஸ்கொட்ரன் லீடர்' கெ.ஜி.பி.எம்.எஸ் குலரத்ன அவர்கள் இக்கருத்தரங்கை ஒருங்கிணைத்து நடத்தினார். மேலும் இங்கு அனுராதபுரம் விமானப்படை முகாமின் கட்டளை அதிகாரி எஸ்.ஜெ.எஸ் பெர்னாண்டோ, 'விங் கமான்டர்' எச்.யு விஜயவீர, 'விங் கமான்டர்' டி. ஐ பெர்னாண்டோ, அதிகாரிகள், சேவையாளர்கள் உட்பட  பலர் பங்குபற்றியமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.


பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.