விமான சமையலறை மற்றும் சமையல் பயிற்சி

இல.07 விமான சமையலறை மற்றும் சமையல் பயிற்சி மற்றும் இல.03 மேம்பட்ட பயிற்சி பாடநெறி விமானப்படையின் துப்பாக்கி சுடுபவர் (கன்னர்ஸ்) பிரிவினருக்கு இலங்கை கேட்டரிங் சேவைகள் பிரிவினால் முறையே அக்டோபர் 15 முதல் நவம்பர் 05 வரை மற்றும் அக்டோபர் 03 முதல் நவம்பர் 02 திகதிவரை நடாத்தப்பட்டது.

எனவே இப்பயிற்சி நெறியானது இலங்கை விமானப்படையின் சர்வேதேச விமான நிலைய முகாமின் வழிகாட்டலுடன் ,விமானப்படை தலைமையகத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட அதேநேரம், இது 'சிரீலங்கன்' விமான சேவையின் உணவு தொடர்பான பிரதம நிறைவேற்று அதிகாரி திரு. சரத் பெர்னான்டு மற்றும் சர்வதேச விமான நிலைய முகாமின் கட்டளை அதிகாரி 'குரூப் கெப்டென்' W.W.P.D. பெர்னான்டுவினாலும் தலைமைதாங்கப்பட்டது.

அதேவேளை 'சிரீலங்கன்' விமான சேவையின் நிறைவேற்று சமையல் அதிகாரி திரு.அந்தோனி அவர்கள் இதனை நடைமுறைப்படுத்தியதுடன், இப்பாடநெறியானது பல்வேறுபட்ட உணவு வகைகளின் தயாரிப்பு, போஷாக்கு பற்றிய அறிவு மற்றும் உணவு தற்காப்பு முறைகள் போன்ற பயிற்ச்சிகளையும் உள்ளடக்கியிருந்தமை விஷேட அம்சமாகும்.


பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.