பாதுகாப்பு சேவை கட்டளை மற்றும் மன்ற கல்லூரி மாணவர்களின் விமானப்படை தலைமையகத்திற்கான உத்தியோகபூர்வ விஜயம்.
இலக்கம்04 பாதுகாப்பு சேவை கட்டளை மற்றும் மன்ற கல்லூரியின் மாணவர்கள் நேற்று இலங்கை விமானப்படை தலைமையகத்திற்கு விஜயம் செய்தனர்.விமானப்படை தலைமையக கேட்போர்கூடத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றதுடன் தற்போதைய பாதுகாப்பு மன்றத்தின் பிரதானியும் விமானப்படை தளபதியுமான'எயார் சீப் மார்சல்'ரொசான் குணதிலக இதற்கு தலைமை தாங்கினார்.
விமான ஒழுங்கமைப்பு அதிகாரி 'எயார் வைஸ் மார்சல்'கோலித குணதிலக வருகை தந்தவர்களை வரவேற்றதுடன் , விமானப்படையின் வரலாறு,யுத்தகாலத்தில் விமானப்படையின் பங்களிப்பு ,எதிர்கால திட்டங்கள் பற்றிய உரையையும் ஆற்றினார்.இந் நிகழ்விற்காக மேஜர் ஜென்ரல் எ.டப். ரனசிங்க உட்பட கல்லூரியின் ஆசிரியகள்20,தரைப்படை மாணவ அதிகாரிகள்42,மற்றும் விமானப்படை,கடற்படை அதிகாரிகள்11 என பலரும் கலந்து கொன்டணர்.குறுகிய கால இப்பாடநெறியை கற்ற பின்னர் முப்படைகளினதும் கட்டளை மற்றும் மன்ற கல்வியினையும் தொடர்ந்து,களனி பல்கலைகழகத்தின் மூலம் பாதுகாப்பு முகாமை தொடர்பான உயர் பட்டமும் வழங்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.