விமானப் படையணியின் தேசிய மாணவர்படையின் வருடாந்த மதிப்பீட்டு நிகழ்வு தியத்தலாவையில் நடைபெற்றது

விமானப் படையணியைச் சேர்ந்த மாணவர் இயக்கத்தினரின் கற்கை நிறைவடைந்து வெளியே செல்லும் நிகழ்வின் 03 வது வருட பயிற்சி முகாம் இம்மாதம் 15ம் திகதி தியத்தலாவை விமானப்படை முகாமில் இடம்பெற்றது.

இந்த முக்கிய பயிற்சி முகாமில் பயிற்சியினை மேற்கொண்டவர்களிற்கு அணிவகுப்பு பயிற்சி,தலைமைத்துவப் பயிற்சி உற்பட அடிப்படை கணணிபயிற்சியும் வழங்கப்பட்டமை விஷேடஅம்சமாகும்.

இந்த விழா இடம்பெற்ற தினம் அணிவகுப்பு நிகழ்வு மிக சிறப்பாக நடைப்பெற்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும். இந்நிகழ்வில் பிரதம அதிதியாக தேசிய மாணவர் படையணியின் இயக்குனர் மேஜர் ஜெனரல் ஜயசுந்தர கலந்து கொண்டதுடன் அணிவகுப்பு மரியாதையையும் ஏற்றுக்கொண்டார்.

இந்நிகழ்வில் தியத்தலாவை விமானப்படை முகாம் கல்விக்கழகத்தின் அணையாளர்,சிரேஷ்ட அதிகாரிகள்,ஆசிரியர்கள் மாணவர்கள் உட்பட பலர் கலந்து சிறப்பித்தமை விஷேட அம்சமாகும்.மேலும் இறுதியாக அணி வகுப்பு மாரியாதையுடன் பயிற்ச்சியை சிறப்பாக முடிந்தவர்களுக்கு பரிசில்களும் வழ்ங்கப்பட்டன.


பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.