''குவன் ப்ரதிபா ப்ரபா

''குவன் ப்ரதிபா ப்ரபா"(“GUWAN PRATHIBA PRABHA)- 2013”என்ற காலிறுதி ஆட்டம் இம்மாதம் 3ம் திகதியில் இருந்து 5ம் திகதி வரை  இலங்கை விமானப்படை  இன் கட்டுநாயக்கவில் உள்ள நிலையத்தில் அரங்கேற்றப்பட்டது. இந்தப் போட்டியில் இருந்து அரையிறுதிப் போட்டிக்கு  கால இறுதிப்போட்டியில் பங்கு பற்றிய 150 போட்டியாளர்களில் இருந்து 30 பேர் மட்டுமே தெரிவு செய்யப்பட்டன. 23 நாடகங்கள் அரங்கேற்றப்பட்டன அதல் 7 நாடகங்களே தெரிவாகின. மற்றும் 24 நடனம் ஜோடிகளுள்  12 ஜோடிகள் தெரிவு செய்யப்பட்டனர்.

இந்த போட்டிகளின் நடுவர்களாக இந்த துறைகளை சார்ந்த திருமதி. இந்திக்க உபமலி, திரு. தயான் வித்தரன மற்றும், திரு லலித் பொன்னம்பெரும, திரு. சந்திம் சிறிவர்தன, செல்வி ஜேட் ஜிக்கன்ஸ், மற்றும் திரு கசுன் டயஸ் , திரு ரோட்னி ஃப்ரேசர் , திரு துமிந்து டெனந்தென்ன மற்றும் திருமதி அனுலா புலத்சிங்கஅனுலா புலத்சின்க ஆகியோர் கலந்து கொண்டனர்.

''குவன் ப்ரதிபா ப்ரபா – இலங்கை விமானப்படை சேவா வனிதா பிரிவின் திருமதி. நிலிகா அபேவிக்ரமவினால் 2011 ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. நடிப்பு மற்றும் சொற்பொழிவுக்கலை, நடனம், பாட சேவை பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களின் திறமையை உக்குவிப்பதற்காகவே ஆரம்பிக்கப்பட்டது.

திறமை தேடல் நான்கு நிலைகளில் உள்ளடக்கப்பட்டுள்ளது. முதல் நிலை மிகவும் பொருத்தமான வேட்பாளர்கள்களை அந்தந்த நிலைய தளபதிகள் அடையாளம் காண்பார்கள். இரண்டாவது பொழுதுபோக்கு துறையில் இருந்து தொழில்முறை நீதிபதிகள் ஒரு குழு மூலம் தீர்மானிக்கப்பட இலங்கை விமானப்படை மேற்பார்வையில் நடைபெறும் கால் இறுதி. நிலைகளில் மூன்று மற்றும் நான்கு அரையிறுதிக்கு போட்டியாளர்களை தெரிவு செய்வது.  கால் இறுதி பங்கேற்பாளர்கள் வெளிப்படுத்திய திறமையை பார்க்கும் போது இந்த ஆண்டு அரையிறுதி  சிறப்பானதாகவே அமையும் என நம்பப்படுகிறது.


பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.